Friday, 25 August 2023

இரயில்வே காலனி - பகுதி -1 இரயில்வே இன்ஸ்டியூட்



  

                ரயில்வே காலனி, ரயில்வேயில் வேலை பார்த்தவர்களின் குடும்பத்தவருக்கு மட்டும்தான் தெரியும் அது என்ன மாதிரியான உலகம்னு, ரயில்வே ஸ்கூல், ரயில்வே ஹாஸ்பிடல் என எல்லாமே எங்களுக்கு ஸ்பெஷல்தான். 

            இது ரயில்வே காலனியோட ஒவ்வொரு பிடிச்ச விஷயங்களை பேசறது, உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் இந்த தொடர் தொடரும்.  ரயில்வே காலனியில் நிறைய இருக்கு எனக்கு அதில் ரொம்ப பிடிச்சது கீழ நீங்க பாக்கற இன்ஸ்டியூட்.

            



           சின்ன பையனா இருக்கறப்ப காமிக்ஸ்ல மட்டும்தான் நல்ல muscularஆ, six packலாம் பாத்துருக்கேன் ஆனா அப்பறமா Terminator judgement day, Rambo  இதெல்லாம் பாத்துட்டு அதிர்ச்சி ஆயிட்டேன் காமிக்ஸ்ல பாத்த மாதிரியே இருக்கானே யாரு சாமி இவன்னு தேடி பாத்தா நம்ம அர்னால்டும், சில்வெர்ஸ்டெர் ஸ்டாலோனும். போதாக்குறைக்கு ஜாக்கி சான் வேற... 6வது annual லீவ்ல இப்படிலாம் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்துருச்சு, கனவை நனவாக்க என்னடா பண்ணலாம்னு யோசிச்சுகிட்டே இருந்தப்ப யாரோ ஒரு அண்ணா சொன்னாங்க single bar  எடுத்தா பைசெப்ஸ்,ஆர்ம்ஸ்லாம் அர்னோல்ட் மாதிரி வரும்னு, அது எங்கடா இருக்குனு தேடி பாத்தா நம்ம இன்ஸ்டிடுட், ஒளி பிறந்துவிட்டது வழி தெரிந்துவிட்டதுனு ஒரே ஜாலி, மூணு மாசத்துல சூரியன் சரத்குமார் மாதிரி ஒத்த கைல தண்டால் எடுக்கபோறேனு முடிவு பண்ணிட்டேன்.  அடுத்த நாள் காலைல எங்க வீட்ல நான் இனி தினமும் பாருக்கு போறேன்னு சொன்னேன். ( இந்த சாதனங்களை வட்டார வழக்கில் அப்படி சொல்லுவோம்) 


    எங்க வீட்ல சரினு சொல்லிட்டாங்க,  போய் பாத்தா என் கிளாஸ்ல கொஞ்சம் பசங்க, எனக்கு பெரிய கிளாஸ்ல நிறைய பசங்க வந்துருக்காங்க, அப்போதான் தெரிஞ்சுது அதே டைலர் அதே வாடகை....அதே தியேட்டர் அதே படம்னு, 

    ஆனால் அங்கதான் பசங்க எப்படி நட்பா மாறுவாங்க தெரியாதவங்க கூட எப்படி உதவி செய்வாங்க, அப்படிலாம் கத்துக்கிட்டேன். நீங்க பாக்கற இன்ஸ்டிடுட்  திறந்தவெளியில் இருக்கறது, யார்னாலும் எப்பனாலும் வரலாம். காலைல கொஞ்சம் பேர் வருவாங்க, சாயந்தரம் கொஞ்சம் பேர் வருவாங்க.

    அங்க போறப்ப நான் சின்ன பையன், அங்க இருக்கறவங்க செய்றத பாத்துதான் உடற்பயிற்சி கத்துக்கிட்டேன், ஏதாச்சு தப்பா பண்ணினா உடனே அங்க இருக்கற அண்ணா மாமா யாராச்சு தானாகவே நம்மள சரி  பண்ணுவாங்க, யோசிச்சு பாருங்க ஒரு ஜிம்ல உங்களுக்கு பாக்கறவங்க எல்லாம் personal trainer ஆ இருந்த எப்படி இருக்கும்?

    எங்க ஸ்கூல்ல படிக்கற பாதி பேருக்கும் மேல காலனிலதான் இருந்தாங்க, பசங்க கிரௌண்ட்க்கு போறதுக்கு காலைலயே அவங்க நண்பர்களை வீட்டுக்கு போய் எழுப்புவாங்க, லேட்டா எந்திரிக்கும் பசங்க வீட்ல திட்டு வாங்கறது இல்லாம காலைலயே வந்து எழுப்பி உயிரெடுக்கும் நண்பர்களோட தொல்லையையும் தாங்கனும், எரிச்சலோடு எழுந்தாலும் அது ஒரு சுகம். அப்பறம் கொஞ்சம் பசங்க அவங்க சைட் அடிக்கற பொண்ணு வீடு வழியா போற மாதிரி பிளான் பண்ணுவாங்க, அந்த பொண்ணுங்க கோலம் போடும் இல்ல பால் வாங்க போகும் எப்படியோ பாத்தா போதும்னு பாத்துருவாங்க.

    உடற்பயிற்சி பண்ற இடத்துல இருக்க பெரியவங்க வாழ்க்கைல அவங்க சந்திச்ச அனுபவங்கள் மனுஷங்கன்னு நிறைய பேசுவாங்க நாம கவனிக்கிறது தெரியும் இருந்தாலும் இந்த பையனுக்கும் ஒரு நல்லது நடக்கட்டுமேன்னு விட்டுருவாங்க. 

      என்கூட என் நண்பன் ராம் வர ஆரம்பிச்சான் தினமும் ஜாகிங் அப்பறம் bars, காலைல இதுக்காகவே சீக்கிரமா 5 மணிக்கு எந்திரிப்போம், நான் சொன்ன அந்த எழுப்பற கொடுமை நான் இவனுக்கு செய்தேன். ஸ்கூல் முடிச்சும் இதே பழக்கம்தான் காலேஜ் போறதுக்கு முன்னாடி கிரௌண்ட் ஒரு நாள் முடியலனா போயிட்டு வந்ததும், இதே patternல  எங்கள் நண்பன் நிஷாந்த் மாதிரி athletes கிரௌண்ட்லயே கிடப்பானுங்க ஏன்னா அவங்க bars அதிகம் பண்ண மாட்டாங்க ,   மொத்தத்தில் எங்களைப்போல் பலருக்கும் இந்த இடம் ஒரு ஆரோக்கிய வேடந்தாங்கல்.   

        வருடங்கள் உருண்டோடிடுச்சு, வேலைக்காக நிறைய பேர் வெளியூர்ல செட்டில் ஆயிட்டாங்க, ஆனால் எங்க இன்ஸ்டிடுட் மாறவே இல்ல, இப்பவும் அதே மாதிரி சின்ன பசங்க வராங்க, அதே மாதிரி பெரியவங்க சொல்லி தராங்க.  இப்பவும் எங்களில் சிலர் அங்க போறோம்,  எங்களோட பழைய வீடுகளை கடந்து, நண்பர்களின் கடந்து, பதின்பருவ காதல்களை  கடந்து....திரும்பி வராத அந்த நாட்களின் ஏக்கங்களோடு, கண்ணீர் வந்தாலும்  சின்ன சிரிப்பையும் நிறைய மகிழ்ச்சியும் மனதில் வைத்துக்கொண்டு, Six pack வைக்க சென்ற அதே இன்ஸ்டிடுட்டிற்கு செல்கின்றோம் தொப்பையை குறைக்க....  

No comments:

Post a Comment

Railway Colony - Part I Railway Institute

                            Railway Colony, its not just any other colony for railwaymen and their family live, it was a place for us where ...