Thursday, 25 December 2014

                                                              வருகிறது வருடம் 

ஒவ்வொரு  வருடமும் வரும்பொழுது எதை இழந்தேன் எதைப் பெற்றேன் என்று யோசிப்பேன் இந்த வருடமும் அதைப்போல யோசித்தேன்....யோசிக்கிறேன்...

 இவ்வருடம் நிறைய பெற்றேன் முக்கியமாக அனுபவங்களை....என்னுடைய புது மோட்டார் பைக் மரியாதையான வேலை...சென்னை வாழ்க்கை சில நல்ல நண்பர்கள்...சில மிக நல்ல பழைய நண்பர்கள்...என அடுக்கிக்கொண்டே போகலாம். எனக்கான தார்மீக பொறுப்புகளை நான் விலகாமல் ஏற்கவும் பழகிக்கொள்கிறேன். 

சில ஈடு செய்ய முடியாத இழப்புகளும் இருக்கத்தான் செய்கிறது, என் பாட்டியின் மறைவு..எப்போது அதிலுருந்து வெளி வருவேன் அல்லது வருவேனா என்றே தெரியவில்லை. ஒரு குடும்பத்தின் முழுமையான அடையாளம் சிதையில் சிதைவதை பார்த்தேன் மரணம் நிகழும்போதெல்லாம் அது ஒரு வாழ்வியல் நிகழ்வு என்றும் ஒரு நகர்வு என்றுமே நினைத்திருந்தேன் இபோது தெரிகிறது அது உயிரின் மதிப்பை நாம் அறிய இறைவன் நமக்களித்த ஒருஅரிய வாய்ப்பு.
 நம்மை சுற்றிலும் நடக்கும் தவறுகளை நாம் கண்திறந்தும் காணமல் இருபதால் எவ்வளவு உயிர்கள் போகின்றன என தோன்றியது...எதாவது ஒரு காரணம் வேண்டாமா நாம் வாழ..ஒரு அர்த்தம் வேண்டாமா நம் மரணத்தில்...இனியாவது விழித்தெழுவோம். தினமும் எவளவோ மரணங்கள் நிகழ்கின்றன நம்முடையதும் அப்படி புதைக்கபடாமல் விதிக்கப்பட்டதாக விதைக்கபட்டதகவும் இருக்கட்டும்...நமக்காவது நாம் நேர்மையாக இருப்போம் ...மற்றவர் நேர்மை இறைவன் கையில்.. புது வருடம் பிறக்கும் சமயத்தில் அனைவரும் எடுக்கும் வெற்று சபதமாகி விடாமல் ஒரு முறையேனும்..வெறியுடன் சப்திப்போம் உயிரின் மதிப்பை அறிந்து நடப்போம் என்று...

No comments:

Post a Comment

Railway Colony - Part I Railway Institute

                            Railway Colony, its not just any other colony for railwaymen and their family live, it was a place for us where ...