காலம் அல்லது கலாம்
கலாம் அய்யாவின் மரணத்தை அனைவரும் துக்கித்துக் கொண்டிருக்கும் இதே வேலையில் காலம் அவா் மூலம் நமக்களித்த பாடங்களையும் கொண்டாடியே தீரவேண்டும்.
அவரை எதற்கெலாம் இவ்வரசு துன்புறுத்தியது? அவமானப் படுத்தியது?? செம்மொழி மாநாடு என ஏதோ ஏனோ நடந்தது அதனை துவக்கி வைத்தது அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டில் இவருக்கு தமிழே தெரியாது என்பது தனிக்கதை. ஆனால் கலாம் அவர்கள் அந்த விழாவிற்கு அழைக்கப்படவும் இல்லை, கலாம் என்றால் கலகம் என யாரோ முத்தமிழறிஞா் விளம்பியதை நான் இங்கு பேச விரும்பவுமில்லை.
இனப்படுகொலை நல்லபடியாக முடிந்து தமிழர் மறுவாழ்வு பெறுகின்றனர் என்ற உண்மையை காங்கிரஸ் அரசு இவா் மூலம்தான் புாியவைத்தது, சூரியசக்தி, காற்றுமின் உற்பத்தி போன்றவற்றைவிட அணுமின்னும் நியூட்ரினோ கழிவுகளும் பாதுகாப்பானது என்பதையும் அரசு ஐயா மூலம்தான் சொன்னது.
நல்லவேளை இனியாவது தப்பித்தாா் ஐயா. அரசு மக்களை குழப்பவே ஒரு அறிவுஜீவியை பாவித்தது எவ்வளவு பொிய அவமானம். நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் முழுமையாக கெட்ட பெயா் எடுக்காமல் கலாம் தப்பித்தாா்.
நம் தலைமுறையின் தலைவா்தான் இந்நாட்டின் கடைசி தலைவனோ என பயமாயிருக்கிறது. எவ்வளவு அழுகை, வருத்தம், கண்ணீர்... ஏன்?
ஏனென்றால் உலகநாடுகளை பின்வாங்க வைத்த ஆயுதங்கள் தராத பெறுமையை அவர் போலியோ பாதித்த சகோதரா்களுக்களித்த எடை குறைவான செயற்கை கால்களில் பெற்றதால் மட்டுமா?இல்லை ஒரு ஒட்டுமொத்த தலைமுறையின் ஒற்றை ஆதர்சமாக இருப்பதாலா?
எதுவானாலும் நாம் மறக்ககூடாது என் கண்முன்னால் ஜனாதிபதி பதவி அரசியல் ஆக கூடாதென்றவா் வாழ்ந்த நாட்டில்தான் ஊழலைத் தவிர வேறொன்றுமறியா நல்லவரும் உள்ளனா். அன்பாா்ந்த அரசியல்வாதிகளே! கலாமுக்கு அழுதது போல் உங்களுக்கு கட்டாயம் அழமாட்டோம். ஆனால், கொண்டாட வைக்காதீர்கள்.
அவர் நம்மை ஒய்வறியாது உண்மையாக உழைக்கச் சொன்னாா்,நாம் கடைகளை அடைத்து அஞ்சலித்தோம். தவறன்றோ? புத்தகங்கள்தாம் புதிய அகங்களை திறக்குமென்றாா் நாம் நூலகங்களை மூடவன்றோ எத்தனிக்கிறோம்..ஆளுக்கொரு மரம் நடச்சொன்னாா் ஐயா,நாம் செய்கிறோமா? கலாம் காலம் இரண்டும் இப்போது ஒன்றுதான்.....
நாம் எப்படி வாழவேண்டும் என நல்லமுறையில் கற்று தந்தாயிற்று நாம் அதை புறக்கணித்தால்????விபரீத விளைவுகள்தான் பதில்.
கண்டிப்பாக இப்போது தலைவா் என மாா்தட்டும் எவர்க்கும் இப்படிப்பட்ட மாியாதை கிடைக்காது தயவு செய்து உங்கள் மரணத்தை எங்கள் கொண்டாட்டமாக்கி விடாதீர்கள்
No comments:
Post a Comment